Reading Time: < 1 minute

கனடாவில் ஜோதிடர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார். மொன்றியாலைச் சேர்ந்த 69 வயதான ரொபர்ட் கரோயூ என்ற நபரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

Tamil Business Directory

லொட்டோ கியூபெக் லொத்தர் சீட்டிலுப்பில் அவர் இவ்வாறு பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளுர் பத்திரிகைகளில் மாதாந்த ஜோதிட எதிர்வுகூறல்களை எழுதி வரும் ரொபர்ட் தனது அதிர்ஸ்டம் பற்றி எதிர்வுகூறியதில்லை.

கிரக நிலையினால் தாம் இவ்வாறு பரிசு வென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1850 மற்றும் 1941ம் ஆண்டில் இவ்வாறான ஓர் கிரக நிலை அமைப்பு காணப்பட்டதாகவும் தற்பொழுது அவ்வாறான கிரக நிலையினால் தமக்கு பரிசு கிட்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரொபர்ட், நாளொன்றுக்கு ஆயிரம் டொலர்கள் என்ற அடிப்படையில் பரிசு வென்றெடுத்துள்ளார்.

நாளாந்த அடிப்படையில் பரிசுத் தொகை தேவையில்லை என்றால் மொத்தமாக 7 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள மடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது வயதினை கருத்திற் கொண்டு பரிசுத் தொகையை முழுமையாக பெற்றுக்கொள்ள திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார்.