Reading Time: < 1 minute

கனடாவில் களவாடப்பட்டு டுபாய்க்கு அனுப்பி வைக்கப்படவிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

சுமார் இரண்டு லட்சம் டொலர் பெறுமதியான நான்கு வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கனடாவின் ஹால்டன் பிராந்திய பொலிஸார் இந்த வாகனங்களை மீட்டுள்ளனர்.

எவ்வாறெனினும் மேலும் நான்கு வாகனங்கள் இரண்டு கொள்கலன்களில் ஏற்கனவெ டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ மற்றும் ஹால்டன் பிராந்தியங்களில் இந்த வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இந்த வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.