Reading Time: < 1 minute
Tamil Business Directory
கல்கரியில் கொள்ளை சம்பவம் ஒன்றை அடுத்து ஏற்பட்ட விபத்தில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒரு சிறுவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகனங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பயணம் செய்த வாகனம் காரணமாக இந்த வாகன விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துச் சம்பவத்தில் ஒன்பது வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




