Reading Time: < 1 minute

சீன சுற்றுலாப் பயணிகளுடன் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tamil Business Directory

அதன்படி சில கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 350,000ஐத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.