Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் பாடசாலையொன்றில் கத்தி குத்து தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நோவா ஸ்கோட்டியாவின் பெட்போர்ட்டில் அமைந்துள்ள சார்ள்ஸ் பீ எலென் பாடசாலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுள்ளது.
கத்தி குத்து தாக்குதலில் காயமடைந்த மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், கயாமடைந்தவர்களின் உடல் நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெயிடப்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாணவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாடசாலை இன்றைய தினம் மூடப்பட்டுள்ளது.
பாடசாலை வளாகம் முழுவதிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஹாலிபிக்ஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




