Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்க உள்ளார்.
ஜனநாயகத்தின் முக்கியத்துவம், நியாயமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக போராடுதல் ஆகியன குறித்து பிரதமர் ட்ரூடோ இந்த மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்த உள்ளார்.
உக்ரைன் – ஹமாஸ் விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 13ம் திகதி ட்ரூடோ இத்தாலிக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து அவர் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள உக்ரைன் சமாதான மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.




