Reading Time: < 1 minute

டொரன்றோ பெரும்பாக பகுதியில் கனடிய சுகாதார நிறுவனம் சில பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தும் உற்பத்தி பொருட்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்கம், மிஸஸாகா, விட்பேய் மற்றும் வுட் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான அடிப்படையிலான 29 வகை உற்பத்திகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை சட்ட ரீதியான முறையில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட உற்பத்திகள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் விற்பனை செய்யப்படும் இந்த பொருட்கள் அங்கீகரிக்கப்படாதவை எனவும் சட்டவிரோதமான இந்த உற்பத்திகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பாரதூரமான சுகாதார கேடுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என கனடிய சுகாதார நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மருத்துவ தரப்பினரின் ஆலோசனை இன்றி இவ்வாறான பொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.