Reading Time: < 1 minute

டொரோண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடாவுக்கு வரும் பயணிகளில் சிலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tamil Business Directory

பல சர்வதேச பயணிகள் மூன்று நாள் விடுதியில் தனிமைப்படுத்தக் கோரும் புதிய விதிக்கு இணங்க மறுத்துவருவதாக இன்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வாரம் நடைமுறைக்கு வந்த COVID தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற மறுத்தவர்களுக்கு Ontarioவின் விதிமுறைகளின் கீழ் 880 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதற்காக எவரையும் தடுத்து வைக்க மாட்டோம் எனவும் காவல்துறையினர் கூறினர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பயணிகளுக்கு அபராதம் விதிக்கும் பொறுப்பு கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தை சார்ந்தது எனவும் Peel பிராந்திய காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.