Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் கெரிசன் பிடாவாவா பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் இரண்டு கனடிய விமானப்படையினரை காணவில்லை.

Tamil Business Directory

கனடிய விமானப் படைக்குச் சொந்தமான சீ.எச்.-147 ஹெலிகெப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த ஹெலிகொப்டரில் மொத்தமாக நான்கு பேர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் கீழே வீழ்ந்தாகவும் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரும், விமானப்படையினரும் தீயணைப்புப் படையினரும் கூட்டாக இணைந்து காணாமல் போன படை வீரர்களை கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஒட்டாவா நதியில் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்வதாகவும், காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.