Reading Time: < 1 minute

கனடாவின் டுப்ரின் பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

டுப்ரின் பகுதியில் நேற்று இரவு வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இவ்வாறு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ருசெல்ஹோம் வீதி, காலேஜ் வீதி மற்றும் டேவர்கோர்ட் வீதிகளுக்கு அருகாமையில் இந்த வீடு அமைந்துள்ளது.

தீ விபத்து குறித்து அறிந்து கொண்ட தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவரது குடும்பங்களுக்கு தீயணைப்பு படையினர் ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

வீட்டிலிருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டதாகவும் இதில் ஒருவரே உயிரிழந்ததாகவும், ஏனையவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிர் காப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காயம் அடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஏனையவர்களுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.