Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் நியூ பிரவுன்ஸ்வீட் பிராந்தியத்தின் ரொத்சேய் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இருவரினதும் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை நிறைவடையும் வரையில் இந்த சம்பவம் தொடர்பில் எவ்வித கருத்துகளையும் வெளியிட முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




