Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்ஹாம் பகுதியில் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த பயிற்றுவிப்பாளர் ஒன்பது ஆண்டுகளாக பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யார்க் பிராந்திய காவல் துறையினர் இந்த தகவல்க வெளியிட்டுள்ளனர்.

2024 மே மாதம் ஒரு பாதிக்கப்பட்டவர் முன்வந்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்கள் 2015ம் ஆண்டில் ஆரம்பித்து 2024ம் ஆண்டு வரை தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுகள் ஆரம்பமான போது பாதிக்கப்பட்டவர் 16 வயதுக்கு கீழ் இருந்ததாக காவல்துறை கூறியுள்ளது.

58 வயதான மார்க்ஹாம் நகரத்தைச் சேர்ந்த கார்த் மோரிஸ் என்பவர், கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.

மோரிஸ், மார்க்ஹாமில் கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் கரப்பந்தாட்டப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும், இதே போன்று பாதிக்கப்பட்ட பிறரும் இருக்கக்கூடும் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.