டொராண்டோ எடோபிகோ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயது சாரதிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து பெப்ரவரி 3ஆம் திகதி மாலை சுமார் 7.15 மணியளவில், கிப்லிங் அவென்யூக்கு அருகிலுள்ள டுன்டாஸ் மேற்கு வீதி மற்றும் அக்ரான் அவன்யு சந்திப்பில் இடம்பெற்றது.
28 வயதான ஒருவர் டுன்டாஸ் வீதியை கடந்து சென்றபோது கிழக்கு திசையில் பயணித்த சாம்பல் நிற டொயோட்டா ரெவ் வாகனம் அவரை மோதியது என தெரிவிக்கப்படுகின்றது.
வாகனம் சந்திப்பை கடந்தபோது பாதசாரியை மோதியது என போலீசார் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
கடுமையாக காயமடைந்த பாதசாரி உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு சாரதி சம்பவ இடத்திலேயே தங்கியிருந்ததாக போலீசார் கூறினர்.
விசாரணைகளின் அடிப்படையில், மிசிசாகாவைச் சேர்ந்த 25 வயதான ஜோசப் டெனியல் என்பவருக்கு “அபாயகரமான முறையில் வாகனம் இயக்கியமை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




