Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
கனடா மத்திய வங்கி (Bank of Canada) முக்கிய வட்டி வீதத்தை 2.75% ஆக மாற்றமின்றி பேணுவதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க வரிகள் பொருளாதாரத்தில் எவ்வாறு தாக்கம் ஏற்படுத்தும் என்பது தெளிவாக தெரிய வராத நிலையில், நிலைமையை கவனிக்க விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெளிவற்ற சூழ்நிலை இன்னும் நீடிக்கிறது,” என்று மத்திய வங்கி ஆளுனர் டிஃப் மேக்லெம் குறிப்பிட்டுள்ளார்.
தகவல்கள் மேலும் கிடைக்கும் வரை வட்டிக் கொள்கையை மாற்றமின்றி வைக்க வேண்டியதாக எல்லா உறுப்பினர்களின் ஒருமித்த முடிவாக இது தீர்மானிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய மாதங்களுக்குப் போலவே, பொருளாதார நிபுணர்கள் மற்றும் சந்தை கணிப்புகளும் இந்த முடிவை எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




