Reading Time: < 1 minute

கனடாவில் முன்னெடுக்கப்பட்டு வந்த ரயில் பணியாளர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

சரக்கு ரயில் ரயில்களில் பணியாற்றும் பணியாளர்களே இந்த போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இந்த இந்தப் போராட்டத்தில் கனடாவின் பிரதான இரண்டு ரயில் சேவை பணியாளர்களும் இணைந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொழிற்சங்க போராட்டம் சில நாட்கள் முன்னெடுக்கப்பட்டாலும் இதன் பாதிப்பு அதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சரக்கு விநியோகத்தில் இந்த தொழிற்சங்க போராட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு நாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் பல மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் என உற்பத்தியாளர்கள் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.