Reading Time: < 1 minute

கனடாவில் சில விமான சேவை நிறுவனங்கள் மலிவு விலையில் விமானக் கட்டணங்களை அறிவித்து வருகின்றன.

Tamil Business Directory

இவ்வாறு விமான பயணக் கட்டணங்கள் குறைவாக காணப்பட்டாலும் வேறும் வழிகளில் பயணிகளிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் பொதுவாக விமானப் பயணக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளன.

எனினும் மறைமுகக் கட்டணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சில விமான சேவை நிறுவனங்கள் மலிவு விலையில் விமானப் பயணக் கட்டணங்களை அறவீடு செய்வதாகவும், குறைந்தளவு கட்டணம் அறவீடு செய்வதாகவும் விளம்பரம் செய்து வருகின்றன.

எனினும், இவ்வாறு மலிவு விலையில் விமானப் பயண கட்டணங்களை அறவீடு செய்யும் நிறுவனங்கள் ஏனைய சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பயணப் பொதிகள் உள்ளிட்ட ஏனைய சேவைகளுக்கு கூடுதலாக கட்டணம் அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.