கனடாவில் பணிநேர மதிய உணவு இடைவேளை மெதுவாக மறைந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
ஃபாக்டர் கனடா வெளியிட்ட ஆய்வின்படி, 61% கனடியர்கள் தங்கள் பணிநேர மதிய உணவு இடைவேளையை முற்றிலும் தவிர்க்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
மேலும், மதிய உணவை எடுத்துக்கொள்பவர்களில் 5 பேரில் 2 பேர் தங்கள் அலுவலக மேசையிலேயே உண்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதிய உணவை மேசையிலிருந்து விலகி, சிறிது நடைபயிற்சி செய்து, சக ஊழியர்களை சந்தித்து, தூய காற்றை சுவாசித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பலர் மதிய உணவை தவிர்ப்பதால் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் என நம்புகின்றனர். ஆனால் உண்மையில் அது எதிர்மாறாக செயல்பட்டு, நாள் முழுவதும் சோர்வு மற்றும் கவனம் சிதறலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில், மதிய இடைவேளை எடுத்தவர்களில் 38% பேர் தங்களுக்கு மன அழுத்தம் குறைந்ததாகவும், 25% பேர் சக ஊழியர்களுடன் உறவு வலுப்பட்டதாகவும், 24% பேர் பிற்பகல் உற்பத்தித் திறன் மேம்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.




