Reading Time: < 1 minute

கனடாவில் பாரிய அளவிலான போதைப் பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 19 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

ஹமில்டன் மற்றும் நயகரா பிராந்தியங்களில் குறித்த நபர்கள் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்த வலையமைப்பு தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொக்கேய்ன், போதை மாத்திரைகள், கிறிஸ்டல் மெத்தப்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் இந்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபர்களிடம் இருந்து ஆயுதங்கள் துப்பாக்கி ரவைகள் நாணயத்தாள்கள் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அடையாளம் காணப்படாத சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் வகை ஒன்றும் இந்த நபர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.