Reading Time: < 1 minute

கனடாவில் பாரியளவில் கிறிப்டோ மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

கிறிப்டோ கிங் என அழைக்கப்படும் எய்டன் பிலிடர்ஸ்கி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்றாரியோவின் விட்டர்பே பகுதியில் வைத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நபர், பல மில்லியன் டொலர் மோசடி செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிலிடர்ஸ்கீ நிதிச் சலவை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட பிலிடர்ஸ்கீ ஒரு லட்சம் டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.