Reading Time: < 1 minute

கனடா-அமெரிக்க எல்லையை கடக்க முயற்சித்த இந்திய குடும்பம் பரிதாபமாக பனிக்காற்றில் உறைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான மனிதக் கடத்தல் வழக்கில் இரு நபர்களுக்கு இன்று (28) தண்டனை வழங்கப்படவுள்ளது.

Tamil Business Directory

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக மக்கள் கடத்தியமை மற்றும் அவர்களை இடம் நகர்த்தியமைக்கு தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளில் கடந்த வருடம் ஹர்ஷ்குமார் படேல் மற்றும் ஸ்டீவ் ஷாண்டுக்கு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

சிறைதண்டனை

2022 ஜனவரி மாதத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர் மற்றும் அவர்களது இரு குழந்தைகள், மைனஸ்ச் பனிச்சுழலில் நடந்து எல்லையை கடக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். சாதாரண ஆடைகளை அணிந்த நிலையில் இவர்கள் எல்லையை கடக்க முயற்சித்தனர் என வழக்கின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது,

இந்த முயற்சியின் போது, ஜகதீஷ் படேல் (39), வைஷாலிபென் படேல் (37), அவர்களின் மகள் விகங்கி (11) மற்றும் மூன்று வயதான மகன் தார்மிக் ஆகியோர் பனியில் உறைந்த நிலையில் எல்லைக்கு அருகே உயிரிழந்தனர்.

சிறுவன் தார்மிக், தனது தந்தையின் கையில் இருந்த நிலையில் இறந்திருந்தார்.

ஹர்ஷ்குமார் படேல் கடத்தலின் திட்டமிடல், குழுவினரைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்ததாக, ஸ்டீவ் ஷாண்டு அமெரிக்க பக்கம் வாடகை வாகனங்களில் அகதிகளை அழைத்துச் சென்றதாக, நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அமெரிக்கா மின்னசோட்டா மாநிலம் வழக்கறிஞர்கள் படேலுக்கு 19 ஆண்டுகள் மற்றும் ஷாண்டுக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை கோரியுள்ளனர். ஆனால் அவர்களது வழக்குரைஞர்கள் தண்டனை குறைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.