Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 609பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 22ஆயிரத்து 848பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 590பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 29ஆயிரத்து 280பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 587பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 70ஆயிரத்து 978பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.