Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 12ஆயிரத்து 32பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் ஐந்தாயிரத்து 468பேர் பாதிக்கப்பட்டதோடு, 56பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 70ஆயிரத்து 278பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 63ஆயிரத்து 835பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 450பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 94ஆயிரத்து 411பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.