Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு கடந்த 24 மணித்தியாலங்களில், 1,133பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 123பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 69,981ஆக உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,993ஆகும்.
மேலும், 31,994பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 32,994பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




