Reading Time: < 1 minute

கனடாவின் ரெறான்ரோ பெரும்பாக பகுதியில் பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய Clinten Creese (27 வயது) & Troy Creese (21 வயது) ஆகிய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

ஆயுத முனையில் பல்வேறு இடங்களில் இந்த இருவரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 14-ம் திகதி முதல் 25ஆம் திகதி வரையில் குறித்த சந்தேக நபர்கள் பல்வேறு இடங்களில் ஆயுத முனையில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்திகள் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்தி இவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சில்லறை கடைகள் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் இவர்கள் இவ்வாறு பணம் மற்றும் லொத்தர் சீட்டுகள் போன்றவற்றை களவாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த இருவரும் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்தனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.