Reading Time: < 1 minute

கனடாவில் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தேடப்பட்டு வந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

டொரொன்டோ நகரின் கிழக்குப் பகுதியில் 35 வயது ஆணை குத்திக்கொன்றதாகக் கண்டறியப்பட்ட சந்தேகநபர், ஒரு வார விசாரணையின் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டனி ஸ்டீவன் ஒலிவேரா (24) என்ற நபர், நிரந்தர முகவரி இல்லாதவர் எனக் கூறப்படுகிறது. அவருக்கு முதன்மைப்படுகொலை (First-Degree Murder) குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த17 ஆம் திகதி இரவு 11 மணி அளவில், டான்ஃபோர்த் அவென்யூ மற்றும் காக்ஸ்வெல் அவென்யூ அருகே உள்ள பிளாசா பின்புறம், இரு ஆண்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது, அஷ்கன் பௌர்நாசிர்-ரூட்பேன் (35) என்பவர் பலமுறை குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.

எனினும், காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபின் உயிரிழந்தார்.

“பாதிக்கப்பட்டவர் தனிமையில் இருந்ததாலும், தப்பிக்கவோ எதிர்த்துப் போராடவோ முடியாத சூழ்நிலையில் இருந்ததாலும், குறிவைக்கப்பட்டிருக்கலாம்” என விசாரணை அதிகாரி ஹென்றி மார்ஸ்மன் கூறினார்.

இந்த சம்பவம் டொரொன்டோ நகரில் 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட 16வது கொலைச் சம்பவமாகும். ஒரு வார விசாரணையின் பின்னர், ஒலிவேரா, ஞாயிற்றுக்கிழமை நயாகரா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.