Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்குகிறது.

Tamil Business Directory

இதன்படி, கடந்த 24 மணித்தியால நிலவரப்படி கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,474ஆகும்.

அத்துடன், புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 2,760பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 116பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,682ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 30,884பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 24,908பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.