Reading Time: < 1 minute

எயார் கனடா விமானிகளின் பணிபுணர் கணிப்பு போராட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கும் விமானிகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மிகச் பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் இன்றைய தினம் விமானிளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளது.

எயார் கனடா விமான சேவை நிறுவனத்தில் சுமார் 5200 விமானிகள் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி விமான பயணங்கள் ரத்து செய்யப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

விமான சேவை நிறுவனத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தவறினால் எதிர்வரும் புதன்கிழமை முதல் பனைப் புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்க விமானிகள் திட்டமிட்டு இருந்தனர்.