Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் காதலிப்பதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் டேட்டிங் செயலி ஒன்றின் ஊடாக குறித்த நபர் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தென் ஆபிரிக்காவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அவசர தேவைக்காக பணம் தேவை எனவும் கூறி பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு சுமார் 60000 டொலர் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மிஸ்ஸிசாகுவாவைச் சேர்ந்த 38 வயதான லின்கோல்ன் மார்கியூஸ் என்ற நபரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வேறும் மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.




