Reading Time: < 1 minute

கனடாவில் தனது காதலனால் கத்தியால் தாக்கப்பட்டு ஒரு பெண் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

ஒக்ஸ்போர்ட் Oxford Street மற்றும் வென்வொர்த் Wentworth Street அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்தியால் காயப்படுத்தும் சம்பவம் குறித்து காலை 11:40 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, பல கத்திக் குத்து காயங்களுடன் இருந்த பெண்மணியை மீட்டுள்ளனர்.

குறித்த பெண் டொரொண்டோவிலுள்ள ஒரு அவசர சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், விசாரணையின் மூலம் அவர் 38 வயதான அந்தப் பெண்மணியின் காதலன் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.