Reading Time: < 1 minute

கனடாவில் ஒரே நபரை மூன்று தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே நபரை, மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 1ம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேக நபர், பாதிக்கப்பட்டவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

பாதிக்கப்பட்டவரும் சந்தேக நபரும் ஒருவரை ஒருவர் அறியாதவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தீப் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் மேலும் தகவல்கள் இருந்தால் வழங்குமாறு போலீசார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

21 வயதான சந்தேக நபர் டொரன்டோவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தேக நபர் வேறும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.