Reading Time: < 1 minute

கனடாவில் ஏடிஎம் இயந்திரங்களை களவாடிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒசாவா பகுதியில் இந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

Durham பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பெண்கள் பிக்கப் ட்ரக் வண்டியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை தரையிலிருந்து பிடிங்கி, இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

30 வயதான சபரினா வாரேன் மற்றும் 33 வயதான எலிசபெத் மெக்ராலின் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவருக்கும் எதிராக 11 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.