Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் உணவு வங்கிகளில் பயன் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் உணவு வங்கிகளில் விநியோகம் செய்யப்படும் உணவு வகை வரையறுக்கப்பட்டுள்ளது.
சுமார் நாற்பது வீதமான உணவு வங்கிகள் இவ்வாறு உணவு விநியோகத்தை வரையறுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநேகமான உணவு வங்கிகள் தங்களது உச்ச அளவு சேவையை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ஒரு மில்லியன் பேர் கூடுதல் எண்ணிக்கையில் உணவு வங்கிகளில் நிவாரணம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
புதிதாக உணவு வங்கிகளின் பயன் பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.




