Reading Time: < 1 minute

கனடாவின் மேற்கு வான்கூவரின் ஹார்ஸ்ஷூ பே கடற்படகு நிலையம் அருகே ஏற்பட்ட விபத்தில், நாலு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இந்த விபத்தில் அவரின் தாயும் அவரது நண்பியும் காயமடைந்துள்ளனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மேற்கு வான்கூவர் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

சிறுவனின் தாய் ஆபத்தான நிலைமையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தோழியும் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பேருந்து ஓட்டுனரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். வேகம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பாக குற்றச்செயல் இடம்பெற்றதா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இதேவேளை, இது மிகுந்த சோகமளிக்கும் விபத்து. இது மிகவும் மனதை வேதனைப்படுத்தும் சம்பவம்” என மேற்கு வான்கூவார் மேயர் தெரிவித்துள்ளார்.