Reading Time: < 1 minute

கனடாவில் ஹமில்டன் பகுதியில் இடம்பெறவிருந்த தாக்குதல் சம்பவம் ஒன்றை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Tamil Business Directory

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் 23 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபரிடமிருந்து பொலிஸார் கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளனர்.

விழா ஒன்றில் பலர் குடியிருந்த போது தாக்குதல் நடத்தும் நோக்கில் குறித்த நபர் ஆயுதம் வைத்திருந்தார் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர்கள் உள்ளிட்ட மக்கள் குழுமியிருந்த இடத்தில் குறித்த நபரிடம் இருந்து துப்பாக்கி மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் இந்த நடவடிக்கை மூலம் பாரிய துயர சம்பவம் ஒன்று தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அருகாமையில் இருந்த நபர்கள் பொலிஸாருக்கு சந்தேகத்திற்கு இடமான குறித்து தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் குறித்த சந்தேக நபரை சோதனையிட்டு கைது செய்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக ஆயுதத்தை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.