Reading Time: < 1 minute

கனடாவின் கியூபிக் மாகாணத்தில் தொலைபேசி வழியாக இடம் பெறும் பண மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கெடினேயுவில் வாழும் பெண் ஒருவர் இந்த மோசடியின் காரணமாக சுமார் 12000 டாலர்கள் இழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாம் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறி நபர் ஒருவர் மக்களிடம் பண மோசடி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமது கடன் அட்டை மோசடியான கொடுக்கல் வாங்கல் ஒன்றுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உரையாடி இந்த மோசடியை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது வங்கியில் இருந்து 5000 மற்றும் 7000 டாலர்கள் பணம் மீள பெற்றுக் கொள்ளப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளதாக சூசன் வெட் டெனிஸ் என்ற பெண் தெரிவித்துள்ளார்.