Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில் இவ்வாறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
நாளைய தினம் பெரும்பாலும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் அறிவிக்கப்படும் என சிரேஸ்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய பிரதி பிரதமர் மற்றும் நிதி அமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில முக்கிய பதவிகளில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பிரதமர் அமைச்சர்களை அழைத்து தனித்தனியாக கலந்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.




