Reading Time: < 1 minute

கனடாவில் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மிக மோசமாக உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2023 மார்ச் மாதத்தில் 9.4 சதவீதமாக இருந்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம், தற்போது 14.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக வீழ்ச்சியடைந்துள்ளதால், நாடு பொருளாதார மந்தநிலைக்குள் அதிகாரப்பூர்வமாகச் சென்றுள்ளது.

அதிக வட்டி விகிதங்கள் காரணமாக நிறுவனங்கள் புதிய முதலீடுகளையோ அல்லது புதிய ஆள்சேர்ப்பையோ செய்யத் தயங்குகின்றன.

மேலும், நுகர்வோர் வரவுசெலவு குறைந்துள்ளதும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்களும் இதற்கு முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.