Reading Time: < 1 minute

கனடாவில் முதியோர் இல்லமொன்றில் 90 வயது மூதாட்டி ஒருவரை 82 வயதான முதியவர் ஒருவர் கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் மொன்றியலின் மேற்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரயன் போல் டென்னிசன் என்ற நபரே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட முதியவர் எதிர்வரும் 4ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

என்ன காரணத்திற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தினால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.