Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 40 ஆண்டுகளின் பின்னர் தனது காதலனுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

Tamil Business Directory

கேப்ரியலா மெலின்டாஸ் என்ற பெண்ணே இவ்வாறு தனது காதலரை கரம் பற்றி உள்ளார்.

நிக்கரகுவா நாட்டில் வசித்த போது, தனக்கு 13 வயது இருக்கும் போது 15 வயதான ஜெமி குடாரா என்பவரை காதலித்ததாக குறிப்பிடுகின்றார்.

எனினும் நிக்கரகுவாவில் இடம் பெற்ற சிவில் யுத்தம் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

ஓரளவு வசதி படைத்த கேப்ரியலாவின் குடும்பத்தினர் புலம்பெயர்ந்துள்ளனர்.

எனினும் ஜெமியின் குடும்பத்தினர் வசதி குறைந்தவர்கள் என்ற காரணத்தினால் போரில் உயிரிழந்தரிக்கலாம் என கபரில்லா நினைத்து வாழ்ந்து வந்துள்ளர்ர்.

எனினும், அண்மையில் தமது காதலரின் உருவத்துக்கு நிகரான படம் ஒன்றை இணையத்தில் கண்டதாகவும் அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட தேடல்களின் பலனாக காதலரை கண்டு பிடித்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தாம் நிக்கிரகுவாவிற்கு சென்று தமது காதலரை சந்தித்ததகாவும் தெரிவிக்கின்றார்.

ஒருவரை ஒருவர் பிரிந்து 40 ஆண்டுகளில் பின்னர் இருவரும் மீள இணைந்துள்ளனர்.

முதல் காதலே எவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்தமை மகிழ்ச்சி அளிப்பதாக அவர்கள் இருவரும் தெரிவிக்கின்றனர்.