Reading Time: < 1 minute

கனடாவின் எட்மாண்டன் பகுதியில் 17 நாட்களான சிசுவை கொலை செய்த அந்த சிசுவின் தந்தைக்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

Tamil Business Directory

குறித்த நபருக்கு நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

வெறும் 17 நாட்களான ஆண் குழந்தையை குறித்த நபர் கொலை செய்துள்ளார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

34 வயதான பிளேயர் ஜான்சன் என்ற நபர் இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

மிகக் கொடூரமான முறையில் சிசுவை குறித்த நபர் தாக்கியதாக நீதிமன்றில் ஒப்புக்கொண்டு உள்ளார். சிசுவின் தலையை கதவில் மோதச்செய்து, தனது முழங்காலால் சிசுவின் தலையை தாக்கி பின்னர் தரையில் வீசி எறிந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆரம்பத்தில் நாய் ஒன்று கட்டிலில் பாய்ந்ததால் சிசு உயிரிழந்து விட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

எனினும், விசாரணைகளின் மூலம் கொடூரமான தாக்குதலில் சிசு கொல்லப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு ஈடுபடவில்லை என்ற காரணத்தினால் ஆறு ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.