கனடாவில், கூடைப்பந்து பயிற்சியின் போது பாலியல் தொல்லை அளித்த பயிற்சியாளர் ஓருவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மாண்ட்ரியல் செயின்ட்-லாரண்ட் உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 12 வயது மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்தாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
35 வயதான முன்னாள் கூடைப்பந்து பயிற்சியாளர் ராபர்ட் லூவுக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மாண்ட்ரியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு 15 வயதாகும் வரை நீடித்த இந்தத் துஷ்பிரயோகம் தொடர்பாக, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் லூ குற்றவாளியாகக் கருதப்பட்டு நீதிபதி பாட்ரிசியா கம்பாக்னோன் இந்தத் தண்டனையை வழங்கினார்.
இச்சம்பவம் தனது அடையாளத்தையும் பிறருடனான உறவையும் சிதைத்துவிட்டதாகப் பாதிக்கப்பட்ட மாணவி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
குற்றவாளி ராபர்ட் லூ தனது செயலுக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் தன் மீதான குற்றச்சாட்டைச் சதி என வாதிட்டு வருகிறார்.
இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு பயிற்சியாளருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், மூன்றாவது பயிற்சியாளர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.