Reading Time: < 1 minute

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரெஞ்சு-பலஸ்தீனிய உறுப்பினரான ரிமா ஹஸன் மான்ட்ரியல் மாநாடுகளில் பங்கேற்க இருந்த நிலையில் கனடாவிற்குள் பிரவேசிகக் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தாம் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இதை “கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சி” என அவர் விமர்சனம் செய்துள்ளார்.

ஆரம்பத்தில் அனுமதி வழங்கப்பட்ட மின்அனுமதி (electronic travel authorization) பின்னர் வெள்ளிக்கிழமை திரும்பப் பெறப்பட்டதாக அவரது கட்சியான லா பிரான்ஸ் இன்ஸோமிஸ் தெரிவித்துள்ளது.

கனடிய அதிகாரிகள், முன்னதாக விசா மறுப்பு அல்லது நுழைவு மறுப்பு, மேலும் குற்றச்சாட்டு அல்லது கைது தொடர்பான தகவல்களை அவர் வெளியிடவில்லை என குற்றம் சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மறுப்புக்கான உண்மையான காரணம், இஸ்ரேல் நுழைவு மறுப்பு மற்றும் பலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு குறித்து அவர் எடுத்துள்ள வலுவான கருத்துகளே என அவரது கட்சி கூறுகிறது.

இந்த வாரம் மான்ட்ரியலில் நடைபெறவிருந்த “பலஸ்தீன ஆதரவு குரல்கள் அடக்கப்படுவது” மற்றும் “வலதுசாரி அரசியல் எழுச்சி” தொடர்பான இரண்டு மாநாடுகளில், ரிமா ஹசன் ஆன்லைன் வழியாக பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.