Reading Time: < 1 minute

கனடாவில் சில பகுதிகளில் மரக்கறி, பழங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil Business Directory

கனடாவின் மொன்றியால் மேற்கு தீவுகள் பகுதியில் இவ்வாறு மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் உணவு பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வது, சவால் மிக்கதாக காணப்படுகின்றது.

இந்தப் பகுதி மக்கள் உணவு பாதுகாப்பின்மை தொடர்பான பிரச்சனைகளை மக்கள் எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வருமானம் குறைந்த மக்கள் ஆரோக்கியமான உணவுகளையும் ஊட்டச்சத்தான உணவுகளையும் பெற்றுக் கொள்வதில் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.