Reading Time: < 1 minute

கனடாவின் மார்க்கம் பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

குறித்த பெண்ணை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

யோர்க் பிராந்திய போலீசார் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

57 வயதான யீங் ஸாங் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி இரவு 10.40 மணியளவில் குறித்த பெண்ணை இறுதியாக கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டீல்கேஸ் மற்றும் வுட்பீன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த பெண்ணை இறுதியாக பார்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் காணாமல் போன சம்பவத்துடன் 26 வயதான சன் க்ளீன் என்பவர் தொடர்பு பட்டிருப்பதாக சந்தேகம் வெளியிடப்பட்டள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் குறித்து தகவல்கள் தெரிந்தால் அதனை அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.