Reading Time: < 1 minute

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளாகவே தொழில் வாய்ப்பு வெற்றிடங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் தொழில் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த இரண்டாம் காலாண்டுடன் ஒப்பீடு செய்யும் போது மணித்தியால சம்பளம் மூன்றாம் காலாண்டில் அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.