Reading Time: < 1 minute

கனடாவின் விமான சேவை ஒன்று தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.

Tamil Business Directory

ஜெட் லைன்ஸ் விமான சேவை நிறுவனம் இவ்வாறு தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக இவ்வாறு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கனடாவின் மூன்று விமான சேவை நிறுவனங்கள் ஓராண்டு காலப்பகுதிக்குள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலிவான விமான சேவையை வழங்கும் விமான சேவை நிறுவனங்களின் ஒன்றான ஜெட்லைன்ஸ் நிறுவனம் இவ்வாறு சேவையை நிறுத்திக் கொண்டுள்ளது.

உள்ளூர் பயணங்களுக்காக இந்த விமான சேவை நிறுவனம் விமானங்களை ஈடுபடுத்தி வந்தது.

இந்த விமான சேவை நிறுவனத்தின் ஊடாக பயண ஏற்பாடுகளை செய்த பயணிகள் செலுத்திய கட்டணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடன் அட்டை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு செலுத்திய கட்டணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.