Reading Time: < 1 minute

ரொறன்ரோ வடக்கு எட்டோபிகோக் பகுதியில் சனிக்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இளம்பெண்ணின் அடையாளம் தெரிந்ததாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

குறித்த சம்பவமானது இரவு சுமார் 11.15 மணியளவில் நடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் துப்பாக்கி குண்டுகள் துளைத்திருந்ததை உறுதி செய்துள்ளனர்.

மேலும், இளம்பெண் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடியபடி இருந்துள்ளார். இதனையடுத்து முதலுதவியும் உயிர்காக்கும் நடவடிக்கைகளும் உடனடியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மரணமடைந்த பெண் 24 வயது Adele Tolentino Eid எனவும் ரொறன்ரோ பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிசார் ஞாயிறன்று உறுதி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.