Reading Time: < 1 minute

கனடாவில் மார்கம் பகுதியில் ஒரு பெண்ணை தாக்கியதாகக் கூறப்படும் ஒரு ஆண், போலீசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார்.

Tamil Business Directory

இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 4:40 மணியளவில் புச்சனன் ட்ரைவ் Buchanan Drive பகுதியில், Warden வோர்டன் அவென்யூ அருகே இடம்பெற்றுள்ளது.

ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருப்பதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம்
இதையடுத்து, குறித்த ஆணை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னர், அந்த ஆணும், பெண்ணும் இருவரும் காயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

காயங்கள் எவ்வளவு கடுமையாக உள்ளன என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இருவரும் மருத்துவமனைக்குச் செல்லும் வேளையில் உயிருடன் இருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட விசாரணைக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.