Reading Time: < 1 minute

டொரன்டோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து மில்லியன் டாலர்கள் பெருமதியான களவாடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பீல் பிராந்திய போலீஸ் பிரிவின் காவல் அதிகாரி நிஷான் துரையப்பா அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சுமார் 78 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு இந்த வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட விருந்த நிலையில் போலீசார் அவற்றை மீட்டு உள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பீல் பிராந்திய பகுதியில் மட்டும் சுமார் 500 களவாடப்பட்ட வாகனங்களை போலீசார் மீட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக கனடாவில் வாகன கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

களவாடப்படும் வாகனங்கள் ரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.