Reading Time: < 1 minute

ஒன்டாரியோ மாகாணத்தின் பர்லிங்டன் நகரில் உள்ள வணிக வளாகத்தின் வாகனத் தரிப்பிடத்தில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை காவல்துறை தேடி வருகிறது.

இரவு 10 மணியளவில் குயிலெப் லைன் மற்றும் பெயார்விவ் சைட் அருகிலுள்ள Burlington Centre Mall வாகனத் தரிப்பிடத்தில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவத்திற்குப் பின்னர் வெள்ளை நிற SUV வாகனத்தில் தப்பிச் சென்ற இரு சந்தேகநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

“வாகனத் தரிப்பிடம் மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள வீதிகளில் இருந்து பாதுகாப்பு கேமரா (CCTV) அல்லது டாஷ் கேம் காட்சிகள் வைத்திருப்பவர்கள் எங்களின் முக்கிய குற்றப்பிரிவு விசாரணையாளர்களை தொடர்புகொள்ள வேண்டும்,” என காவல்துறை அதிகாரி ஜெஃப் டில்லன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து காவல்துறை இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. “இது குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். பொதுமக்கள் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதாக நம்பவில்லை,” என டில்லன் கூறினார்.